செய்முறை:பாஸ்மதி; அரிசியைத் தவிர சிக்கனுடன் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து, தயிர் சேர்த்து ஊற வைக்கவும். (2 முதல் 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும்) ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி, பச்சை மிளகாய் – 2, வெங்காயம் – 2 சேர்த்து வதக்கவும். பின் ஊற வைத்த மசாலா சிக்கனை 15 நிமிடம் வேக வைக்கவும். பின் வேக வைத்த அரிசியை மேலே சேர்த்து, நெய், குங்குமப்பூ, பால், லெமன், கரம் மசாலா, Fried onion, புதினா, கொத்தமல்லி; தூவி 15 நிமிடம் தம் போட வேண்டும். இப்போது சிக்கன் தம் பிரியாணி ரெடி. இதனுடன் தயிர் பச்சடி மற்றும் சிக்கன் குருமா சேர்த்து பரிமாறவும். பாஸ்மதி அரிசியை வேக வைக்கும் முறை மற்றும் தம் போடும் முறையை முன்பக்கம் பார்க்கவும்.குறிப்பு: தம் பிரியாணியை சூடாக சாப்பிடுவதைவிட சிறிது ஆற வைத்து சாப்பிட சுவை அதிகரிக்கும்.
சிக்கன் தம் பிரியாணி
previous post