தர்மபுரி, ஜூன் 27: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் சாலை வழியாக தினமும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் செல்கின்றன.
இப்பகுதியில் அடிக்கடி நிகழும் விபத்துகளை தவிர்க்கும் விதமாக, தர்மபுரி மாவட்டம், தொப்பூரில் ரூ.775 கோடியில் உயர்மட்ட நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி, பழைய போலீஸ் குடியிருப்புகள் அருகே, உயரமான நெடுஞ்சாலை தூண்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக, தொப்பூர் கணவாய் பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்துக்கள் மற்றும் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், வாகனங்கள் சீராக செல்லவும், இடையூறு ஏற்படாமல் இருக்கவும், சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணி மும்முரமாக நடந்து
வருகிறது.