திருவிடைமருதூர்: ஆடுதுறை அருகே தியாகராஜபுரம் மெயின் சாலையை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ஆனந்தராஜ் (60). இவர் கும்பகோணம் ஜவுளிக்கடையில்வேலை செய்து வந்தார். நேற்று இவர் கும்பகோணத்திலிருந்து தியாகராஜபுரத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். திருவிடைமருதூர் கச்சேரி சாலையில் சென்றபோது சாலையோரம் நின்றிருந்த வேன் மீது மோதியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அதே நேரத்தில் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற ஆம்புலன்ஸ் வேன் மோதியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிந்து ஆம்புலன்ஸ் டிரைவர் கருணாநிதியை (43) கைது செய்தனர்.