அன்னூர்,ஜூன்16: கோவை மாவட்டம், காரமடை காமராஜ் நகரை சேர்ந்த திருமூர்த்தி மகன் மோனிஷ் (20), இவரது நண்பர் ராஜபாளையத்தை சேர்ந்த கனகரத்தினம் மகன் விஜயராஜா (20). இருவரும் சத்தி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தனர். நேற்று மதியம் இருவரும் பைக்கில் அன்னூரில் இருந்து பசூர் நோக்கி ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று கொண்டிருந்தனர்.
மதியம் 2 மணிக்கு பசூருக்கு முன்னதாக உள்ள பத்திரகாளியம்மன் கோவில் வளைவு அருகே தடுப்புச் சுவரில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோனிஷ் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே இறந்தார். விஜயராஜா அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.