சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே குறிச்சி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (38). இவர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு, தனது உறவினரோடு அணைக்கரைப்பட்டி சாலையில், நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அணைக்கரைப்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த சிவச்சந்திரன் (18) என்பவர், ஓட்டி வந்த டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து செந்தில்குமார் மீது மோதியது.
இதில் இருவரும் படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு, சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிவச்சந்திரன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.