Monday, March 4, 2024
Home » சாலை விதிகள் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

சாலை விதிகள் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

by Ranjith

 

மதுரை, ஜன. 12: போக்குவரத்து போலீசார் சார்பில், சாலை போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தப்பட்டது. மதுரை, போக்குவரத்து போலீசார் சார்பில், காளவாசல் சந்திப்பில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாநகர போக்குவரத்து துணை ஆணையர் குமார் பங்ேகற்றார். டூவீலரில் செல்வோர் ஹெல்மெட் அணிவது, நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் போது சீட்பெல்ட் அணிவதை வலியுறுத்தி, இரு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கல்லூரி மாணவ, மாணவிகள் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

துணை ஆணையர் குமார் கூறுகையில், ‘‘போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் வாகனத்தை ஓட்டுவது, செல்போன் பயன்படுத்திக் கொண்டு வாகனம் ஓட்டுவது, சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேக அளவை மீறி அதிக வேகத்தில் ஓட்டுவது, குடிபோதையில் ஓட்டுவது, சரக்கு வாகனங்களில் அதிக பாரங்கள் மற்றும் ஆட்களை ஏற்றி செல்வது ஆகிய விதிமீறல்களில் ஈடுபடுவோரின், ஓட்டுநர் உரிமம் குறைந்தபட்சம் மூன்று மாதத்திற்கு தற்காலிக நீக்கம் செய்யப்படும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் துணை கமிஷனர் திருமலை குமார், உதவி கமிஷனர் செல்வின்குமார் போக்குவரத்து ஆய்வாளர்கள் கார்த்திக் கணேஷ்ராம், நந்தகுமார், மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் தார்ஜூஸ் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

13 − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi