திருப்பூர், ஆக.27: டிரைவர்கள் சாலை விதிகளை பின்பற்றி விபத்துகளை தடுக்க போலீசாருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி டிரைவர்களுக்கு அறிவுறுத்தினார். திருப்பூர் வடக்கு போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில் பல்வேறு சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை டிரைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி பேசியதாவது:- டிரைவர்கள் கட்டாயம் சீருடை அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். வாகனங்களில் அனைத்து ஆவணங்களும் கட்டாயம் இருக்க வேண்டும். செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டக்கூடாது. இதுபோல் ஒரு வழி பாதையில் செல்லக்கூடாது.
சாலை விதிமுறைகளை பின்பற்றி விபத்துகளை தடுக்க போலீசாருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். என்றார். இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், குருசாமி மற்றும் போலீசார் முனியப்பன், வரதராஜ், சுகுமார், சத்தியேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் வடக்கு போக்குவரத்து போலீசார் சார்பில் டிரைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.