சிவகங்கை, மே 20: இளையான்குடி அருகே உள்ள வடக்கு கீரனூரில் சாலை வசதி செய்து தரக்கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கிராமத்தினர் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது, வடக்கு கீரனூரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சாலைகள் குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பஸ் வசதியும் இல்லை. இதனால் வடக்கு கீரனூர் மற்றும் இப்பகுதி வழியே செல்லும் கிராமத்தினர், பள்ளி குழந்தைகள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே சாலை வசதி செய்யவும் தொடர்ந்து குறிப்பிட்ட நேரங்களில் வடக்கு கீரனூர் வழி அரசு பஸ் சென்று வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை வசதி கோரி மனு
0