பரமக்குடி, அக்.6: சாலை பாதுகாப்பு விதிகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என பரமக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பத்மபிரியா தெரிவித்துள்ளார். பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் பாம்புவிழுந்தான் பகுதிகளில் நடைபெற்றது. என்எஸ்எஸ் திட்ட அலுவலர் பாலமுருகன் வரவேற்றார். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பத்மபிரியா மாணவர்கள் ஒழுக்கத்துடனும் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.
அதிவேகமாகச் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. மாணவர்கள் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என கூறினார். இதனைத் தொடர்ந்து ஆர்டிஓ அலுவலகம் முன்பு மரக்கன்றுகள் நடப்பட்டது. பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மரக்கன்றுகளை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பத்மபிரியா நட்டு வைத்தார். ஆசிரியர்கள் குமரேசன், துரைசிங்கம் மற்றும் என்எஸ்எஸ் மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் என்எஸ்எஸ் திட்ட உதவி அலுவலர் நாகராஜன் நன்றி கூறினார்.