சாத்தூர், ஆக.27: சாத்தூரில் சாலை பணி நடைபெறும் இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. சாத்தூர் நகர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகளில் மழைநீர் செல்வதற்காகவும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் தளகற்கள் பதிக்க பள்ளங்கள் தோண்டப்பட்டது.
தோண்டியிருந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கியதால் சாலை வழியாக சென்ற பெண்கள் சிலர் பள்ளத்தில் விழுந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் பணிகள் நடைபெறும் பகுதியில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பள்ளம் தெரியாமல் விழுவது தவிர்க்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.