செங்கம், அக். 5: ₹2 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சாலை பணியின் தரத்தினை கூடுதல் கலெக்டர் திடீெரன ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இளங்குன்னி. நீப்பத்துறை ஆகிய கிராமப்புறங்களில் ₹2 கோடி மதிப்பிலான தமிழக முதல்வரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் தற்போது சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியை திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரிஷப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலையின் தரம் மற்றும் சாலை பணிக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களின் அளவீடு தரம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது நெடுஞ்சாலை துறை உதவிப் செயற்பொறியாளர் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜுலு மற்றும் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் பணி மேற்பார்வையாளர்கள், அரசு துறை அலுவலர்கள் ஆகியோர் ஆய்வின் போது உடன் இருந்தனர். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கூடுதல் ஆட்சியில் உத்தரவிட்டார்.