உடுமலை, நவ. 6: தாராபுரம் நெடுஞ்சாலை கோட்டத்துக்கு உட்பட்ட மடத்துக்குளம் பகுதியில் சில சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டன. இவற்றை சீரமைக்கும் பணியில் மாநில நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
உடுமலை- குமரலிங்கம் சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட இதர சாலைகளில் உள்ள பள்ளங்கள் சரி செய்யப்பட்டு வருகின்றன. இதன்மூலம் முதல்வரின் பள்ளமில்லா சாலை, பாதுகாப்பான பயணம் என்ற எண்ணம் நிறைவேற்றப்பட்டு வருவதாக நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.