ராஜபாளையம், மார்ச் 18: மாவட்டத்தில் நெடுஞ்சாலையின் சாலை ஓரத்தில் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்வதற்காக வரையப்பட்டுள்ள வெள்ளை கோடுகளை தாண்டி சாலை வரை செடிகள் வளர்ந்துள்ளதால் டூவீலரில் செல்வோர் சாலையின் நடுவே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலையில் செல்லும் பிற வாகனங்களால் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள செடிகளை நெடுஞ்சாலை துறையினர் வெட்டி களைய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையோர செடிகளால் விபத்து அபாயம்
0
previous post