சாயல்குடி, மார்ச் 12: முதுகுளத்தூர் அருகே சாலையில் கிடந்த நான்கரைப் பவன் தங்க சங்கிலியை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்களை போலீசார் பாராட்டினர். கமுதி அடுத்துள்ள பெரிய உடப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(46), அய்யனார்(32). இவர்கள் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் தொழில் செய்து வருகின்றனர். முதுகுளத்தூரில் இருந்து கமுதிக்கு இருசக்கர வாகனத்தில் வரும்போது சாலையில் கிடந்த நான்கரைப் பவுன் தங்கச் சங்கிலியை கண்டெடுத்துள்ளனர். இதனை முதுகுளத்தூர் காவல்துணைக் கண்காணிப்பாளர் சண்முகம், காவல் ஆய்வாளர் ஜான்சிராணி ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து தங்க சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இருவரையும் முதுகுளத்தூர் போலீசார் பாராட்டினர்.
சாலையில் கிடந்த தங்கசங்கிலி போலீசில் ஒப்படைப்பு
0
previous post