மேல்மலையனூர், ஆக. 29: சாலையில் உலர வைத்த நெல்மணிகளை நாசம் செய்த குரங்கு கூட்டத்தால் விவசாயி அதிர்ச்சி அடைந்தார். விழுப்புரம் மாவட்டம் வளத்தி அடுத்த செல்லபிராட்டை அருகே நெடுஞ்சாலையில் விவசாயிகள் நெல் மணிகளை உலர வைத்திருந்தனர். மேல்மலையனூர் பகுதியில் விவசாயிகளால் சொர்ணவாரி அறுவடை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை உலர வைப்பதற்காக செல்லபிராட்டை அருகே நெடுஞ்சாலை ஓரம் கும்பலாக விவசாயி கொட்டி வைத்திருந்தார். ஆனால் இதனைக் கண்ட குரங்குகள் கூட்டமாக வந்து நெல்மணிகளை உட்கொண்டு நாசமாக்கியது. விவசாயி இல்லாத நேரத்தில் நெடுஞ்சாலையில் உலர வைக்கப்பட்ட நெல் மணிகளை குரங்குகள் கூட்டம் உட்கொண்டு நாசம் செய்தது விவசாயியை அதிர்ச்சி அடைய செய்தது.