ஏரல், நவ.28: சாயர்புரம் அருகே மாடு மீது பைக் மோதிய விபத்தில் படுகாயமடைந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாரி டிரைவர் சிகிச்சை பலனிaன்றி இறந்தார். தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகேயுள்ள பட்டாண்டிவிளை ஈ.வே.ரா தெருவைச் சேர்ந்த துரைராஜின் மகன் ஜெயக்குமார் (44). லாரி டிரைவர். இவரது மனைவி ரத்னாதேவி (39). தம்பதிக்கு ஒரு மகளும், இரு மகன்களும் உள்ளனர். கடந்த 25ம் தேதி தூத்துக்குடிக்கு பைக்கில் சென்ற ஜெயக்குமார் அன்று இரவு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். சாயர்புரம் ரோட்டில் தனியார் மீன் கம்பெனி அருகே வந்த போது இருள்மண்டிய பகுதியில் இருந்து மாடு ஒன்று திடீரென வந்தது. இதில் மாடு மீது பைக் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பைக்கில் இருந்து கீழே விழுந்த ஜெயக்குமார் பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (26ம் தேதி) மாலை பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து அவரது மனைவி ரத்னாதேவி அளித்த புகாரின் பேரில் சாயர்புரம் எஸ்.ஐ. அந்தோனி சூசைராஜ் வழக்குப் பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.
சாயர்புரம் அருகே சாலை விபத்தில் காயமடைந்த லாரி டிரைவர் பரிதாப சாவு
0