செய்முறைஅடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதில் நெய்யைச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு சிவக்க வறுத்துக்கொள்ளவும். இதில் சோம்பு, பட்டைப்பொடியைச் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின் புதினாவை சேர்க்கவும். நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும். நறுக்கிய காய்கறிகள், பச்சைப்பட்டாணி சேர்த்து மிளகாய்த்தூள், உப்புடன் ஒரு லிட்டர் (5 டம்ளர்) தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதி வந்ததும் தயிர் சேர்த்து கொதிக்கவிடவும். பின் சாமை அரிசியைச் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு 5நிமிடம் தீயை மிதமாக வைத்து மூடி போட்டு வேகவிடவும். பிரியாணி பதம் வந்ததும் இறக்கி புதினா தூவி பரிமாறவும்.