சாத்தூர், மே 26: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ரயில்வே நிலையத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ரயில்வே சுகாதாரத்துறை சார்பாக விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ரயில் நிலையத்துக்கு வருகை தந்த பயணிகளிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பயணிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிளாஸ்டிக் தவிர்ப்போம், மஞ்சப்பையை பயன்படுத்துவோம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதகைகளை கையில் ஏந்தி சுகாதார பணியாளர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.