சாத்தூர், ஜூன் 14: சாத்தூர் அருகே மேட்டமலை பகுதிகளில் பல்வேறு தெருக்களில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் கடந்த சில மாதங்களாக கழிவு நீர் செல்லும் கால்வாயிகளில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால், கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் அங்கேயே தேங்கி விடுகிறது.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால், மேட்டமலை பகுதி தெருக்களில் உள்ள கால்வாய்களில் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.