சாத்தூர்: விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த 2 குழந்தைகளுக்கு காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் தங்க மோதிரம் வழங்கினார். நிகழ்ச்சிக்கு சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி கலந்து கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளுக்கு பிரட், பிஸ்கட், பழங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் சாத்தூர் கிழக்கு வட்டார் தலைவர் சுப்பையா, மேற்கு வட்டாரத் தலைவர் கும்கி கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.