சாத்தூர், ஆக.19: விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சாத்தூர் நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதை தொடர்ந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இதனை தொடர்ந்து சாத்தூர் நகர் பகுதிகளான அண்ணாநகர், மேலகாந்திநகர், தென்வடல்புதுத்தெரு, முக்குராந்தால் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் திமுகவின் சாதனைகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும், திமுக அரசு செய்து வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் மக்களிடம் எடுத்துரைத்தார். இதில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், நகர்மன்ற தலைவர் மற்றும் நகர செயலாளர் குருசாமி, மதிமுக நகர் செயலாளர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் கணேஷ்குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.