சாத்தூர், ஆக.18: சாத்தூரில் பூட்டிய வீட்டு கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டுள்ளது. சாத்தூர் சிதம்பரம்நகரில் வசித்து வருபவர் பிரகலாதன்(60). இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் வெளியூரில் இருக்கும் தம்பி வீட்டுக்கு சென்று கடந்த பத்து நாட்களாக தங்கியுள்ளார். நேற்று காலை சாத்தூர் வந்து வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரகலாதன் வீட்டிற்குள் சென்று பார்த்தார். வீட்டில் பீரோவில் இருந்த நான்கு கிராம் தங்க காயின் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள பட்டு சேலையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பிரகலாதன் கொடுத்த புகாரில் சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.