சாத்தான்குளம், ஆக.6: சாத்தான்குளம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் எஸ்.ஐ. சுரேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் ரோந்து சென்றனர். இதில் சாத்தான்குளம் அருகே பிரண்டார்குளம் பகுதியில் உள்ள குளம் அருகே நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணத்தைச் சேர்ந்த முருகனின் மகன் லட்சுமணன் (35), ஆலங்கிணறைச் சேர்ந்த சிவசுப்பிரமணியனின் மகன் மருதையா (55), வடக்கு பன்னம்பாறையைச் சேர்ந்த மாரியப்பனின் மகன் மாடசாமி (30), மேல பண்டாரபுரத்தைச் சேர்ந்த வெள்ளையாவின் மகன் ராமகிருஷ்ணன் (41), சாத்தான்குளம் கூவைகிணறைச் சேர்ந்த சுடலையின் மகன் அழகுராஜன் (49) உள்ளிட்ட 7 பேர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சுற்றி வளைத்த போலீசார், லட்சுமணன், மருதையா, மாடசாமி, ராமகிருஷ்ணன், அழகுராஜன் ஆகிய 5 பேரை கைது செய்ததுடன் இவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரூ.20,820 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.