சாத்தான்குளம், ஆக. 27: சாத்தான்குளம் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது. சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை சிவனாந்தபுரம் சாய்பாபா கோயில் எதிரே சாலையோரம் குழாய் உடைந்து தண்ணீர் வரும்போதெல்லாம் குடிநீர் வீணாகி சாலையோரத்தில் தேங்கி வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை நேரத்தில் குடிநீர் வீணாகுவது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அதிகாரிகள் இதனை கவனித்து குடிநீர் குழாய் உடைப்பை சீர் செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.