சாத்தான்குளம், ஜூலை 8:சாத்தான்குளம் அருகே சவுக்கியபுரம் விலக்கில் கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.இதனை பார்த்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் அருகே உள்ள சவுக்கியபுரம் விலக்கில் தட்டார்மடம் செல்லும் சாலையோரம் கிராம மக்களுக்கு கூட்டு குடிநீர் வழங்கும் குழாய் உடைந்து அதில் தண்ணீர் வரும்போது எல்லாம் உடைப்பு வழியாக வெளியேறி வீணாகி சாலையில் தேங்கி நிற்கிறது. சாத்தான்குளம் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் நேரத்தில் தண்ணீர் வீணாவதை பார்த்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆதலால் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இதனை கவனித்து உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.