சாத்தான்குளம், செப். 4: சாத்தான்குளம் கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. வட்டார சட்டப் பணிகள்குழுவின் சார்பில் நடந்த இக்கூட்டத்துக்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி கோபால அரசி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கலையரசிரீனா தலைமை வகித்தனர். இதில் வரும் செப். 9ம் தேதி நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் குறு, சிறு வழக்குகள் முடித்து வைக்கின்ற வழக்குகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, எஸ்.ஐக்கள், சாத்தான்குளம் ரத்தினராஜ், மெஞ்ஞானபுரம் ஜான்ரோஸ், வக்கீல்கள் வேணுகோபால், அந்தோனி ரமேஷ்குமார், முத்துராஜ், ஈஸ்டர் கமல், குற்றவியல் நீதிமன்ற தலைமை எழுத்தர் ஜலெட், நீதிமன்ற உதவியாளர்கள் முத்துலட்சுமி, எஸ்தர், சுந்தரி உள்ளிட்ட நீதிமன்ற காவலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். வட்ட சட்ட பணி குழு நிர்வாகி ஜோன்ஸ் நன்றி கூறினார்.