கோபால்பட்டி: சாணார்பட்டி அருகே கோபால்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் விஜயன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்ற சாணார்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு சீதன பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர் தர்மராஜ், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தவர் பாட்சா, சாணார்பட்டி யூனியன் தலைவர் பழனியம்மாள் சுந்தரம், துணை தலைவர் ராமதாஸ், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள், குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.