கோபால்பட்டி, ஜூன் 5: சாணார்பட்டி அருகேயுள்ள பெத்தயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் மணிமாறன் (55). இவர் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் முத்துப்பாண்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த 18 வயது நபருக்கும் வீட்டு இடம் சம்பந்தமாக தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இதுதொடர்பாக அந்த நபர், மணிமாறனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அந்த நபர் மணிமாறன் மற்றும் அவரது தாயாரை தென்னை மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணிமாறன் அளித்த புகாரின் பேரில் சாணார்படடி எஸ்ஐ வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்தார்.
சாணார்பட்டி அருகே தாய், மகனை தாக்கியவர் கைது
0
previous post