நன்றி குங்குமம் டாக்டர்Rapid Fireசாக்லெட்டைப் பிடிக்காதவர்களோ, வெறுப்பவர்களோ இருக்கவே முடியாது. குழந்தைகள் போல பெரியவர்களுக்கும் சாக்லெட் என்றவுடன் அதை சாப்பிடும் எண்ணமும் தானாகவே வந்துவிடும். குழந்தைகளுக்கு சமமாக பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் சாக்லெட் உடலுக்கு நல்லதா, கெட்டதா உள்பட சில முக்கியக் கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா. சாக்லெட்டுகளில் ஏதேனும் உடல்நலத்துக்கு உகந்த சத்துகள் உள்ளதா?பொதுவாக நாம் சாப்பிடும் சாக்லெட்டுகளில் எந்தவிதமான சத்தும் இருப்பதில்லை. வெறும் சுவைக்காக மட்டுமே நாம் அதை உட்கொள்கிறோம். ஆனால், டார்க் சாக்லெட்டுகளில் மட்டும் அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளன. இது உடலுக்கு மிகவும் நல்லது. அது தவிர வழக்கமாக நாம் பயன்படுத்தும் சாக்லெட்டுகளில் எந்தவித சத்தும் இல்லை.சாக்லெட் பற்றி ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன?The journal of nutrition இதழில் வெளியான ஆய்வு ஒன்றில், சாக்லெட்டுகள் நம் உடலின் கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதாகக் கூறியிருக்கிறது. இதற்கான காரணிகள் என்னவென்பதையும் விளக்கியிருக்கிறார்கள். சாக்லெட் பார்களில் இருக்கும் Plant sterols மற்றும் Cocoa flavanols ஆகியவற்றின் மகிமைதான் அது. இந்த பலன்களை டார்க் சாக்லெட்டுகளே தருகின்றன என்று புரிந்துகொள்ள வேண்டும். அன்றாட வாழ்வில் சாக்லெட்டுகளை எப்படி பயன்படுத்தலாம்?சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் அடையாளமாக சாக்லெட்டுகள் இருக்கின்றன. ஆனாலும், முடிந்தவரை டார்க் சாக்லெட்டுகள் உண்பது நல்லது. அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கும் டார்க் சாக்லெட் கொடுத்துப் பழக்கப்படுத்தலாம். மார்க்கெட்டுகளில் கிடைக்கும் தரமற்ற சாக்லெட்டுகள் பின்விளைவுகளை உண்டாக்கும். முக்கியமாக இரவு நேரங்களில் சாக்லெட்டுகள் உண்ணக் கூடாது.அதன்பிறகு அந்த கலோரிகளை எரிக்க வேண்டியிருக்கும். அதேபோல் சாக்லெட் சாப்பிட்ட பிறகு நன்றாக வாயைக் கொப்பளிப்பதும், ஒன்றுக்கு மேற்பட்ட சாக்லெட் சாப்பிடாமல் இருப்பதும் முக்கியம்.;சாக்லெட்டுகள் இதயத்திற்கு நன்மை தருமா?சாக்லெட்டுகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் டார்க் சாக்லெட்கள் இதயத்திற்கு நன்மை பயக்கும். ஏனெனில், அதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதனால் இதயப் பிரச்னை உள்ளவர்கள் எந்தவித அச்சமுமின்றி டார்க் சாக்லெட்டுகளை எடுத்துக் கொள்ளலாம். பெரியவர்கள் சாக்லெட் சாப்பிடுவதால் ஏதேனும் பாதிப்புகள் உண்டா?சாக்லெட்டில் அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்படுவதால் நீரிழிவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. குழந்தைகளும் சாக்லெட் தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பருமனும், பல் சொத்தை பிரச்னையும் ஏற்படும். தொடர்ந்து அதிகமாக உட்கொண்டால் பல் சொத்தை தீவிரமடையும்.சாக்லெட்டுகளில் இருக்கும் பிரச்னைகள் என்ன?சாக்லெட்டுகளில் அதிகப்படியான வெள்ளை சர்க்கரை கலக்கப்படுகிறது. இது நமக்குத் தேவையற்ற அதிக கலோரிகளை நமக்குக் கொடுக்கிறது. இதனை Empty calories என்கிறோம். அதேபோல், பல் தொடர்பான பல பிரச்னைகள் சாக்லெட்டுகள் காரணமாக வருகின்றன. இவற்றுடன் அதில் நிறம், சுவை போன்றவற்றுக்காகக் கலக்கப்படும் ரசாயனங்களும் ஆரோக்கியத்தை சீர்குலைப்பவை.டார்க் சாக்லெட்டுகளுக்கு அப்படி என்ன சிறப்பு?டார்க் சாக்லெட்டுகளில் அதிகப்படியான Cocoa என்கிற வேதிப்பொருள் அடங்கியிருப்பதால் பல நன்மைகள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சாக்லெட் தயாரிப்பில் என்னென்ன இருக்கிறது?சாக்லெட்டில் அதிகப்படியான சர்க்கரை, பால் பவுடர் மற்றும் பட்டர், வெனிலா, கோகோ எசன்ஸ்கள் கலந்து தயாரிக்கப்படுகின்றன.சாக்லெட் தயாரிப்பில் முடி கலக்கப்படுகிறதா?சாக்லெட்டுகள் சுத்தமான அங்கீகரிக்கப்பட்ட முறையில்தான் தயாரிக்கப்படும். சாக்லெட்டில் முடி சேர்க்கப்படுகிறது, அதனால்தான் அது மென்மையாக இருக்கிறது என்பதெல்லாம் கட்டுக்கதைகள்.தொகுப்பு: மித்ரா
சாக்லெட் சந்தேகங்கள்
92
previous post