கும்பகோணம், ஆக.20: கும்பகோணத்தில் ஆவணி அவிட்டத்தையொாட்டி, சாக்கோட்டை படைவெட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.கும்பகோணம் அருகே சாக்கோட்டை ஊராட்சியில் உள்ள படைவெட்டி மாரியம்மன் கோயிலில் நேற்று விஸ்வகர்ம ஆவணி அவிட்ட பூஜை நடைபெற்றது. முன்னதாக, கோவில் தலைமை குருக்கள் பிரசன்னா விஸ்வகர்மா படத்திற்கு பூஜைகள் செய்து பூணூலை அணிவித்து விழாவை துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து காயத்ரி ஜெபம் செய்து ஆச்சாரியார்கள் அனைவரும் பூணூல் அணிந்துகொண்டனர். விஸ்வ பிராமண உபாத்தியாயர் லட்சுமி தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த பூஜையில் அழகு.த.சின்னையன், ஆச்சாரியார்கள் முருகேசன், திருநாவுக்கரசு, செந்தில், ஆதவன், முருகானந்தம் மற்றும் விஸ்வகர்மா சமூகத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.