கரூர், செப். 30: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமத்தை மையப்படுத்தி தெற்கு மற்றும் வடக்கு பகுதிகள் உள்ளன. இந்த இரண்டு பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இதில், தெற்கு காந்திகிராமம் பகுதி வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. தாந்தோணிமலை, முத்துலாடம்பட்டி, கணபதிபாளையம் ஆகிய பகுதிகளுடன் இணைந்த பகுதியாக தெற்கு காந்திகிராமம் உள்ளது.
இந்த பகுதியில் சில குறிப்பிட்ட பகுதிகளில் இதுநாள் வரை சாக்கடை வடிகால் வசதி அமைக்காமல் உள்ளது. எனவே இந்தப்பகுதியில் சாக்கடை வடிகால் வசதி அமைத்துத்தர வேண்டும் எனவும் இப்பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெற்கு காந்திகிராம விரிவாக்க பகுதிகளில் சாக்கடை வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிகை வைத்தனர்.