நாகர்கோவில், ஜூலை 6: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாகர்மித்ரா என்ற முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடத்திற்கு பணிபுரிய குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில் காலியாக உள்ள ஏழு பணியிடங்களுக்கு கல்குளம் தாலுகாவை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மீன் வள அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல் ஆகிய இளங்கலை பட்ட படிப்புடன் கூடுதலாக தகவல் தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வயது 1.7.2025 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை ஜூலை 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், நாகர்கோவில் இருப்பு குளச்சல், சைமன்காலனி முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாகர் மித்ரா பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
0