தேனி, ஆக. 11: சவுதி அரேபியாவில் பிஎஸ்சி நர்சிங் படித்தவர்களுக்கு ரூ.1 லட்சம் சம்பளம் வழங்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளதாக கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சவுதி அரேபியா அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன் கூடிய பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 21 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண் நர்சுகள் பணிநியமனம் செய்யப்பட உள்ளனர்.
மேலும் ,டேட்டா எண்ட்ரி, எச்ஆர்டி சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியில் சேருபவர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்பட உள்ளது. இப்பணியில் சேருபவர்களுக்கு மாதம் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விபரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpowerல் கண்டு அறிந்து கொள்ளலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.