விருதுநகர், ஆக.26: விருதுநகர் மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்தில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பஷிர் அஹமது தலைமையில் மாவட்ட செயலாளர் இஸ்மாயில் முன்னிலையில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு செயல்முறைகளை நடைமுறைப்படுத்தி புதிய பஸ் நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த நடைமுறையால் பழைய பஸ் நிலைய பகுதியிலுள்ள மக்களும், வெளியூரில் இருந்து வந்து செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதனால் மதுரை-சிவகாசி, மதுரை-கோவில்பட்டி புறநகர் பஸ்கள் அனைத்தும் பழைய முறைப்படி மீனாம்பிகை பஸ் நிறுத்தம் வழியே வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகர் சாத்தூர் நான்குவழிச்சாலை ஆர்.ஆர்.நகர் மேம்பாலம் கிழக்கு பகுதியில் சர்வீஸ் ரோடு, வடமலைக்குறிச்சி விலக்கில் சர்வீஸ் ரோடு பணிகளை விரைவாக துவக்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். விருதுநகர் மற்றும் சுற்றுப்பகுதி ஊராட்சிகளில் அதிக அளவில் சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.