கரூர், ஆக. 19: சர்வீஸ் சாலையோரம் நீண்ட நேரம் வாகன நிறுத்தம் செய்யப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது குறித்து கண்காணித்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் மாநகரைச் சுற்றிலும் திருச்சி, மதுரை, சேலம், நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு பைபாஸ் சாலை செல்கிறது. இதில், திருக்காம்புலியூர் மற்றும் வெங்ககல்பட்டி அருகே மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.இதே போல், வெங்கமேடு கரூர் இடையேயும் மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், முக்கிய மேம்பாலங்களில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.இந்நிலையில், சர்வீஸ் சாலைகளை குறி வைத்து, கனகர வாகனங்கள் அதிக நேரம் நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் சர்வீஸ் சாலைகளில எளிதாக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. மாநகர பகுதிகளை ஒட்டியுள்ள மேம்பாலத்தை ஓட்டியுள்ள சர்வீஸ் சாலைகளில் இதுபோன்ற நிலை நிலவி வருவதால் இந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சர்வீஸ் சாலைகளில் வாகன நிறுத்தத்தை கண்காணித்து அதனை முறைப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.