பொன்னேரி, செப். 2: மீஞ்சூர் ஒன்றியம், காணியம்பாக்கம் கிராமத்தைச் பள்ளி மாணவி சர்வதேச அளவில் நடைபெறும் சிலம்ப போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மாணவிக்கு, பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்து ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். திருவள்ளுர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம் காணியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவி தர்ஷினி, தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்று, கேரளாவில் நடைபெற உள்ள சர்வதேச சிலம்ப போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வகையில் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தர்ஷினியை நேரில் சந்தித்து ரூ.25 நிதி உதவி வழங்கி சால்வை அணிவித்து, பாராட்டு தெரிவித்தார். அப்போது, மீஞ்சூர் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், மீஞ்சூர் முன்னாள் பேரூர் செயலாளர் மோகன்ராஜ், காங்கிரஸ் மாவட்ட துணை செயலாளர் ஜலந்தர், மீஞ்சூர் கிழக்கு வட்டார தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன், வினோத், வினோத்குமார், ஜெய்சங்கர், உதயராஜ், உதயகுமார், ராஜ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் லோகு, ராஜேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.