பெரம்பலூர், ஜூன் 18: சர்வதே கூட்டுறவு ஆண்டு 2025 மற்றும் சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டியானது, “ஒருவருக்காக எல்லாரும் ஓடுவோம், எல்லோரும் ஓடி கூட்டு உறவாகுவோம்” என்ற தலைப்பில் ‘சமத்தும் கூட்டுறவின் மகத்துவம் கூட்டுவோம் ஓடுவோம், கூட்டுறவால் உலகைவெல்வோம்’ என்ற கருப்பொருள் கொண்டு சென்னை தீவுத்திடலில் ஜூலை 6ம் தேதி காலை 5.30 மணிக்கு நடைப்பெறவுள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அனைவரையும் இப்போட்டியில் பங்கேற்க அழைக்கிறார். மினி மாரத்தான் போட்டியானது சென்னை தீவுத்திடலில் தொடங்கி சுவாமி சிவானந்தா சாலை வழியாக மன்றோ சிலை சென்று மீண்டும் சென்னை தீவுத்திடலில் வந்து முடிவடைகிறது. இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான வயது வரம்பு 18-40, 40 மற்றும் அதற்கு மேல் ஆகும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.30,000/-, இரண்டாம் பரிசு ரூ.20,000/- மூன்றாம் பரிசு ரூ.10,000/- வழங்கப்படும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே பரிசுகள் வழங்கப்படும். ஒற்றுமை திருவிழாவில் பங்கேற்க நுழைவு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 97909 54671 செல்போன் அல்லது tncu08@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.