மாமல்லபுரம், ஆக. 19: மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரையில், கடந்த 15ம் தேதி தொடங்கிய சர்வதேச காற்றாடி திருவிழா நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதில், இந்தியா, தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த 45க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று, தேசியக் கொடி, கரடி, புலி, ஆக்டோபஸ், பாம்பு, கதக்களி, சூப்பர்மேன், டிராகன், ஜல்லிக்கட்டு காளை, சுதந்திர போராட்ட வீரர்களின் உருவங்களை பல வண்ண வடிவங்களில் காற்றாடிகளை பறக்க விட்டனர்.