மதுரை, மே 20: மதுரை காந்தி மியூசியத்தில் சர்வதேச அருங்காட்சிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் தேசிய மற்றும் சுற்றுலா சின்னங்கள் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி, காந்தி மியூசியத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி, இந்திய, தமிழ்நாட்டு விடுதலை இயக்க வரலாறு, கலை, பண்பாடு இலக்கியம் என்ற தலைப்பில் வினாடி வினா நடைபெற்றன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் ரோட்டரி மாவட்ட கவர்னர் ராஜா கோவிந்தசாமி, மியூசிய ஆட்சி குழு உறுப்பினர் ராமலிங்கம், கல்வி அலுவலர் நடராஜன், மாணவ மாணவியர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.