எப்படிச் செய்வது?வெல்லத்தை கரைத்து வடித்து பாகு காய்ச்சி
கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி 1
கப் தண்ணீர் சேர்த்து திக்கான முதல் பால், பின் மீண்டும் 1 கப்
தண்ணீர் சேர்த்து இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும். சர்க்கரைவள்ளிக்
கிழங்கை தோல் சீவி துருவிக் கொள்ளவும். வாயகன்ற, அடி கனமான பாத்திரத்தில் இரண்டாம் பால், சர்க்கரைவள்ளிக்கிழங்கு துருவல் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வேகவிடவும்.
நன்கு வெந்ததும் முதல் தேங்காய்ப்பால், வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாக
ஒரு கொதி வந்ததும் ஏலக்காய்த்தூள் கலந்து இறக்கவும். முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.குறிப்பு: வெல்லத்திற்கு பதில் சர்க்கரை அல்லது கருப்பட்டியும் சேர்க்கலாம்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு டிலைட்
previous post