இன்றைய உணவு பழக்கங்களில் மளமளவென உயர்ந்து வரும் மற்றுமொரு பொருள் சர்க்கரை. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் சர்க்கரை அளவு, 8 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு தினசரி 12 கிராமும், அதற்கும் மேற்பட்ட வயதினருக்கு 24; கிராமும் தான். அதாவது சாதாரண மனிதன் ஒரு நாளைக்கு; 6 டீஸ்பூன் (24 கிராம்). இந்த அளவு சர்க்கரையைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமாம். ஆனால் தற்போதைய நிலைமை வேறுமாதிரியாக இருக்கிறது. இனிப்பு வகைகளில் மட்டும் சர்க்கரை சேர்த்தது போய், இப்போது எல்லாவற்றிலுமே சர்க்கரையைக் கலக்கிறார்கள். இனிப்பான பழங்களை ஜூஸ் போடும்போது கூட, அதனுடன்; சர்க்கரையை கலந்து தான் குடிக்கிறோம். காய்கறிகள், பழங்கள்; போன்ற உணவு வகைக்குள்ளேயே இருக்கிற சர்க்கரைகள், உடலுக்குக் கேடு விளைவிக்காது. ஆனால் நம் உணவுப் பொருட்களில் கலக்கப்படும் சர்க்கரை தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதாவது, குளிர்பானங்கள், டீ,; காபி, பிஸ்கட், இனிப்பு பண்டங்கள், ஜாம், சாக்லேட், ஐஸ்க்ரீம், கேக் போன்றவைதான் ரிஸ்க். 1750-ம் ஆண்டில் ஒரு நபரின் சர்க்கரை பயன்பாட்டின் அளவு வருடத்திற்கு இரண்டு கிலோவாக; இருந்தது. இது 1850 -ம் ஆண்டில் பத்து கிலோவாகவும், 1994-ம் ஆண்டில் 60 கிலோவாகவும்,; 1996-ம் ஆண்டில் ஒரு நபரின் சர்க்கரை பயன்பாட்டின் அளவு; 80 கிலோவாகவும் உயர்ந்துள்ளது. சராசரியாக; வாழ்நாளில் நாம் சாப்பிடும் சர்க்கரையின் அளவு இரண்டு டன் என்ற அளவில் உள்ளது. சர்க்கரையை அதிகம் உண்பதால் இதன் விளைவாக, சர்க்கரை வியாதி,; இதய நோய்கள், உடற்பருமன், அதிக கொலஸ்டிரால் கொழுப்பு கல்லீரல் நோய் (fatty liver) போன்ற நோய் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
சர்க்கரைக்கும் கட்டுப்பாடு வேண்டும்
120
previous post