மேட்டூர், ஆக.28: மேட்டூர் அருகே சரக்கு லாரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் தொப்பூரை சேர்ந்தவர் மிதுன்ராஜ் (25). லாரி உரிமையாளர். கடந்த 24ம் தேதி தொப்பூர் கேண்டீன் பஸ் நிறுத்தம் அருகேயுள்ள லாரி புக்கிங் அலுவலகத்தில், தனது லாரியை நிறுத்தி இருந்தார். நேற்று முன்தினம் மதியம் மிதுன்ராஜ் தனது லாரியை, மேட்டூர் சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள கிரானைட் கம்பெனியில், கிரானைட் பாரம் ஏற்றுவதற்காக எடுத்து ெசன்றார். தொடர்ந்து லாரியின் பின் கதவை திறந்தபோது, சுமார் 30வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலமாக கிடப்பதை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்த தகவலின்பேரில், கருமலைகூடல் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இறந்து கிடந்த வாலிபர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தொப்பூர் பகுதியில் சுற்றித்திரிந்தது தெரிய வந்தது. அவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சரக்கு லாரியில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்
previous post