நாமக்கல், ஜூன் 19: நாமக்கல் அருகே உள்ள காவேட்டிபட்டியை சேர்ந்தவர் பாபு(42). இவர் நாமக்கல் மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளராக குடிநீர் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் அளிக்கப்படுகிறது. இவருடன் வேலை செய்யும் மற்ற ஊழியர்களுக்கு ரூ.18 ஆயிரம் மாதம் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனால் தனக்கு சம்பளம் குறைவாக இருப்பதாக கூறி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள செல்போன் டவரில், நேற்று இரவு 10 மணியளவில் ஏறி, பாபு போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு நாமக்கல் போலீசார் மற்றும் பாபுவின் உறவினர்கள் வந்தனர். பாபுவிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்து கீழே இறங்க வைத்தனர். இதையடுத்து போலீசார் அவரிடம் எச்சரிக்கை விடுத்து, உறவினர்களுடன் பாபுவை அனுப்பி வைத்தனர்.
சம்பள உயர்வு கேட்டு செல்போன் டவரில் ஏறி ஒப்பந்த ஊழியர் போராட்டம்
0