கோவை, மே 24: சமூகநீதி அமைப்பு சாரா மற்றும் பொதுப்பணியாளர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. “கோவை மாநகராட்சியின் ஒப்பந்த தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும், இஎஸ்ஐ மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்களை வஞ்சிக்கும் போக்கை தடுக்க வேண்டும். கோவையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மையத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்திற்கும் குடிநீர் வழங்க வேண்டும்’’ என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகராட்சி வாகன ஓட்டுனர் நலச்சங்க தலைவர் சிங்கை பிரபாகரன் தலைமை தாங்கினார். சமூக நீதிக்கட்சி மாநில தலைவர் வக்கீல் பன்னீர்செல்வம், பொதுச்செயலாளர் வெள்ளமடை நாகராஜன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் சேகுவேரா சரவணன், பொள்ளாச்சி முருகன், விக்னேஷ், அஸ்கர் அலி, பிரதாப், மேரி, சரஸ்வதி, கவிதா, கலா, சிவகாமி, பட்டேல் பாலு, செந்தில், ராஜேந்திரன் மற்றும் பலர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், திரளான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.