அரூர்: அரூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 130 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கினர். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில், அரூரில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சித்ரா தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால், நகர செயலாளர் முல்லைரவி, ஒன்றிய செயலாளர்கள் வேடம்மாள், சந்திரமோகன், சௌந்தரராசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சமுதாய வளைகாப்பு விழா
225