அரியலூர், அக்.6: அரியலூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுசிலா தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா கலந்து கொண்டு அரியலூர் வட்டாரத்துக்கு உட்பட்ட 150 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருள்கள் மற்றும் 5 வகையான உணவுகளை வழங்கி வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் அன்பரசி, வட்டார மருத்துவ அலுவலர் சத்யா, வாலாஜா நகரம் ஊராட்சி மன்றத் தலைவர் அபிநயா இளையராஜன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜன், மதிமுக மாவட்ட செயலாளர் ராமநாதன், மதிமுக ஒன்றிய செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.