கோவை, ஆக. 28: கோவை சோமனூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள், பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: இந்திரா நகர் பகுதியில் 120 குடும்பங்கள் உள்ளன. இங்கு 1984-ல் அரசால் ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்பட்ட நிலத்தில், கோயில் மற்றும் விளையாட்டு மைதானம் என வரைமுறை செய்து வழங்கியுள்ளனர்.
இதனை கடந்த 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், தற்போது கருமத்தம்பட்டி புதிய நகராட்சி மூலமாக விளையாட்டு மைதானத்தில் சமுதாய கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. ஊர் ெபாதுமக்கள் கருத்தை கேட்காமல் செய்துள்ளனர். எங்களுக்கு விளையாட்டு மைதானம் வேண்டும். சமுதாய கூடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.