திருச்சி, செப்.4: மதி இந்திராகாந்தி கல்லூரியின் சமஸ்கிருத பேரவையானது “சமஸ்கிருதத்தில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில் திருச்சி தூய வளனார் கல்லூரி சமஸ்கிருத துறைத் தலைவர் மாதவாச்சாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லூரி செயலர் முனைவர் கோ.மீனா தலைமை தாங்கினார். தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன், இயக்குநர் அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் கெஜலெட்சுமி கலந்து கொண்டார். மாணவி ஜனனி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் பேசுகையில், சமஸ்கிருதத்தில் உள்ளஅறிவியல் நுணுக்கங்களைக் எடுத்து கூறினார். தொடர்ந்து வான சாஸ்திர முறைகளைப் பற்றி விளக்கினார். அதனைத் தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் கல்லூரி மாணவி அனன்யா நன்றி கூறினார். கருத்தரங்கில் கல்லூரியின் இளநிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவிகள் கலந்து கொண்டனர்.