நன்றி குங்குமம் டாக்டர்தற்போது உடற்பயிற்சி மையங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் அதேவேளையில், அங்கு தரப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகள், புரோட்டீன் பவுடர்கள் மற்றும் பார்கள், எனர்ஜி டிரிங்குகளை எடுத்துக் கொள்வதும் ஒரு ஃபேஷனாகவே மாறிவிட்டது.; இது சரியானதுதானா என்று ஊட்டச்சத்து நிபுணர் தேவியிடம் பேசினோம்…தசைக்கட்டுகளை எடுத்துக்காட்ட புரோட்டீன் பார்கள் மற்றும் பவுடரை அதிகம் விரும்பி எடுத்துக் கொள்கிறார்கள். தசை வளர்ச்சிக்காக கொடுக்கப்படும் இத்தகைய துணை ஊட்டச்சத்துகளில் அமினோ அமிலங்கள் மற்றும் புரதங்களின் தொகுப்பு மிகுந்–்துள்ளது. இவை தசை கட்டமைப்பிற்கும், உடற்பயிற்சி செய்யும்போது, உடலில் உள்ள கொழுப்பை விரைவாக எரிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன.இவை தசை அடர்த்தியை அதிகரிக்கச் செய்தாலும் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமலில்லை. பல பெயர்களில் விற்கப்படும் புரோட்டீன் பவுடர்களை தகுதியான ஊட்டச்சத்து நிபுணர் ஆலோசனை இல்லாமல், உடற்பயிற்சியாளர்கள் அனுபவத்தை மட்டும் கருத்தில் கொண்டு, தினமும் எடுத்துக் கொண்டால் உடலில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.ஒரு மனிதனின் தினசரி புரதச்சத்து தேவையானது அவர்களின் உடல் எடையைச் சார்ந்து இருக்கிறது. பொதுவாக ஜிம் செல்பவர்கள் தங்களின் தசைகளின் வளர்ச்சிக்கு அல்லது உடல் எடையை குறைப்பதற்காக, அங்கு விற்கப்படும் புரோட்டீன் பவுடர் மற்றும் துணை ஊட்டச்சத்துக்களை எடுக்கும்போது, அதற்கேற்ற கலோரிகளை எரிக்க வேண்டும். உடற்பயிற்சிகள் செய்வதில் குறைவான ஆற்றலை செலவழித்துவிட்டு, ஊட்டச்சத்துக்களை மட்டும் அதிகம் எடுத்துக் கொண்டால், அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் உடலில் தங்கி எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து மதிப்பு, அதற்கேற்ற உடற்பயிற்சிகளை சமநிலையில் இருப்பது அவசியம். இதை அறியாமல் தங்கள் உடலுக்கு தாங்களே, தீங்கை வரவழைத்துக்; கொள்கிறார்கள்.புரோட்டீன் பவுடரை அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால் சந்திக்கும் பக்க விளைவுகளைப் பார்ப்போம்…* சமநிலையற்ற ஊட்டச்சத்து கலவை (Unbalance Nutrient Composition)பால், முட்டை மற்றும் இறைச்சி போன்ற புரதங்கள் இயற்கையான ஊட்டச்சத்து கலவை கொண்டதாகும். புரோட்டீன் பவுடர்களில் அதிக அளவு புரதச்சத்து இருப்பதால் அவை சமநிலையற்ற ஊட்டச்சத்து கலவையாகிவிடும்.* இன்சுலின் அளவை அதிகரிக்கும் புரோட்டீன் பவுடர்களில் whey Protein; அதிகம் காணப்படுகிறது. இவை உணவுக்கு பின் உள்ள ரத்த சர்க்கரை மற்றும் அடிப்படை இன்சுலின் எனப்படும் (Basal insulin Growth factor – I Plasma level) நிலையை அதிகரிக்கும்.* சிறுநீரகக் கற்கள் உங்களின் தசைப்பருமனை கூட்டுவதற்கு, கிரியேட்டின் அதிகம் இருக்கும் புரோட்டீன் பவுடர்களை தொடர்ந்து எடுத்து வருவதால், கிரியேட்டின் சிறுநீரகத்தில் தங்கிவிடும். அவற்றை வெளியேற்றுவதற்கு சிறுநீரகம் அதிகப்படியாக வேலைசெய்ய வேண்டிய அழுத்தத்தை கொடுக்கிறது. நாளடைவில் சிறுநீரக கற்கள் வரும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. இது சில நேரங்களில் நீண்டகால சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.* செரிமான பிரச்னைகள் தசைவலிமையைக் கூட்டும் பெரும்பாலான பொருட்கள் உணவுக்குழாயில் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. மேலும், இவற்றில் இருக்கும் கிரியேட்டனின் இரைப்பை குடல் சம்பந்தமான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடியது. வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற தொந்தரவுகள் வரலாம். மேலும் இத்தகைய துணை ஊட்டச்சத்துப் பொருட்களில், புரோட்டீன் பவுடரில் லாக்டோஸ் அதிகம் உள்ளது. லாக்டோஸ் சகிப்புத் தன்மை உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளும் போது அவை தீவிரமான செரிமான பிரச்னைகளை உண்டாக்கும். குமட்டல், வயிறு வீக்கம், நெஞ்செரிச்சல் போன்ற தொந்தரவுகள் வரலாம்.* தூக்கமின்மை பிரச்னைதசைகளை வலுவடையச் செய்யும் இவ்விதமான துணை ஊட்டச்சத்து பவுடர்களில் கஃபைனும் கலந்திருக்கிறது. கஃபைன் உடற்பயிற்சியின் வேகத்தை கூட்டுவதற்காக சேர்க்கிறார்கள். கஃபைன், அதிக உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தால் கூட, சராசரிக்கும் அதிகமாக ஜிம்மில் நேரத்தை செலவிடுவதாலும், குறிப்பாக இரவு நேரத்தில் எடுத்துக் கொள்வதால், அமைதியற்ற தன்மை, பதற்றத்தை கொடுத்து தூக்கமின்மையை ஏற்படுத்தும்.அதற்கு பதிலாக மாவுச்சத்து, புரதச்சத்து, வைட்டமின், தாது உப்புக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களுடன் தண்ணீரை சரியான அளவில் அருந்துவதே ஆரோக்கியமானது. இயற்கையான உணவுகளில் கிடைக்கக்கூடிய நல்ல தரமான புரதத்தை (Good Quality protein) நாம் உடற்பயிற்சியுடன் சரியான முறையில் சேர்த்துக் கொள்ளலாம். அவை….* உணவில் தினமும் 1 – 2 முட்டைகள் சேர்த்துக்கொள்ளலாம். இதில் 6- 8 கிராம் அளவில் புரதச்சத்து உள்ளது மற்றும் வைட்டமின், துத்தநாகம், இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்திருக்கிறது. * 100 கிராம் கோழி இறைச்சியில் 30 கிராம் அளவிலான புரதச்சத்து உள்ளது. இதில் கொழுப்பு அளவு குறைவாகக் காணப்படுவதால், உணவில் தினமும் சேர்த்து கொள்ளலாம்.* பால், பாலாடைக்கட்டி, தயிர் மற்றும் அதன் வகையை சார்ந்த யோகர்ட்டிலும் புரதச்சத்து உள்ளது.கடலை வகைகள், தானியங்கள், உலர் கொட்டைகளான பாதாம், முந்திரி இவற்றிலும் புரதச்சத்து மிகுந்துள்ளது.மீன் வகைகளில், சால்மன் மீன்(Salmon fish). சூரை மீன்(Tuna fish) இவற்றில் உடலுக்கு நன்மை விளைவிக்கும் ஒமேகா கொழுப்பு அமிலம் உள்ளது.இந்த உணவுகளின் மூலம் உடலுக்குத் தேவையான புரதச்சத்தை எடுக்க முடியாதவர்கள், தேவைப்பட்டால் புரோட்டீன் பவுடரை சேர்த்துக் கொள்ளலாம். அப்படி எடுக்கும்போது ஒருவர் அவரது எடையில் ஒரு கிலோவுக்கு 1 கிராம் என்ற விகிதத்தில் புரோட்டீன் பவுடரை எடுத்துக் கொள்ளலாம். சாதாரணமாக உடற்பயிற்சிகள் செய்பவர்களுக்கு இந்த அளவு போதும். பாடி பில்டர்ஸ், விளையாட்டு வீரர்கள் போன்றவர்களுக்கு வேண்டுமானால் அவரவர் ஆற்றல் எரிப்புக்குத் தகுந்த அளவு எடுத்துக் கொள்ளலாம். அதற்காக, ஜிம்மில் சேர்ந்ததுமே புரோட்டீன் பவுடர்களை எடுத்துக் கொள்வதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.தகுந்த உடற்பயிற்சிகளை தகுதியான உடற்பயிற்சி நிபுணரின் உதவியோடும், ஊட்டச்சத்து நிபுணர் ஆலோசனையோடும் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதும் மிக அவசியம். – உஷா நாராயணன்
சப்ளிமென்ட்ஸ் எடுத்து கொள்ளலாமா?!
82
previous post