ஆர்எஸ்.மங்கலம், ஆக. 18: ஆர்எஸ்.மங்கலம் அருகே உள்ள சனவேலி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் யூனியன் சேர்மன் ராதிகா பிரபு தலைமையில் நடைபெற்றது. ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் ராதிகாபிரபு தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆணையாளர் லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி மலைராஜன், ஆர்எஸ்.மங்கலம் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் கண்ணன், ஒன்றிய குழு துணை தலைவர் சேகர் உள்ளிட்டோர்கள் முன்னிலை வகித்தனர். இத்திட்ட முகாமில் சனவேலி,மேல்பனையூர், கற்காத்தகுடி, புல்லமடை, ஒடைக்கால், ஏஆர்.மங்களம் ஆகிய 6 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். இம்முகாமில் 484 மனுக்கள் பெறப்பட்டு துறைவாரியாக பிரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.